மீனவர்கள் போராட்டத்திற்கு சீமான் நேரில் ஆதரவு

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆகிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நியாயமான தீர்ப்பு வந்தால் இதை விட்டு விடலாம், இல்லையென்றால் வழக்கு போடுவேன். கடற்கரை ஓரத்தில் மீன் விற்கக் கூடாது, ஆனால் கடற்கரையில் சமாதி கட்டி எல்லோரையும் புதைக்கலாமா? இது ஏற்புடையதா? என்று கேள்வியெழுப்பினார்.
Tags :