கூடங்குளம் பகுதியில் பணிபுரியும்  வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த திருநெல்வேலி மாவட்டஎஸ்.பி.

by Editor / 05-03-2023 12:00:36am
கூடங்குளம் பகுதியில் பணிபுரியும்  வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த திருநெல்வேலி மாவட்டஎஸ்.பி.

 திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெளி மாநில தொழிலாளர் சுமார் 2500- க்கு மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வேலை பார்த்து வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,கடந்த சில நாட்களாக  தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் அதனைக் கண்டு யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம் எனவும் நீங்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் உங்கள் மாவட்டத்தில் பணியாற்றுவது போல் இங்கு  பணியாற்றலாம் என்றும் மேற்படி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் அதைக் கண்டு நீங்களோ  உங்களது   குடும்பத்தினரோ  யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் உங்களுக்கு அடிப்படை வசதிகள்  மற்றும் என்ன உதவிகள் தேவை என்றாலும் உடனடியாக காவல் துறையினராகிய எங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் நாங்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம் எனவும் உங்களுக்காக தமிழக அரசும் காவல்துறையும் உறுதுணையாக எப்போதும் இருப்போம் என அவர்களிடம்  விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்து தெரிவித்தார்கள். மேலும் வெளிமாநில தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தும் பின்னர் தொழிலாளர்களின்  நிறைகுறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,அதற்குரிய நடவடிக்கை அரசு மூலம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். 

 

Tags :

Share via