இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.. வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நேற்று நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24-ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். பிறகு 25 ஆம் தேதிவாக்கில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது.
Tags :