by Staff /
27-06-2023
03:00:38pm
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, செந்தில் பாலாஜி மனைவி மேகலா, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பு, “செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம். தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் நீதிமன்ற காவல் நீடிக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. செந்தில்பாலாஜியை மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்க முடியும்” என வாதிட்டுள்ளது.
Tags :
Share via