யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம்பெண் பலி
யூடியூப் பார்த்துவிட்டு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி புளியம்பட்டியைச் சேர்ந்த லோகநாயகி (27), பிரசவத்தை தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்த, கணவர் மாதேஷ் (30)-ஐ போலீசார் கைது செய்தனர். குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லோகநாயகிக்கு செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் பிரசவம் நடந்தது. அவரது கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். இருப்பினும், அப்பெண்ணின் நிலை மோசமடைந்தது. இதனால், தாயும், சிசுவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே அப்பெண் இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இதனை தொடர்ந்து, கணவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :