போக்குவரத்து கழக பணிமனையில் திடீர் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று திடீர் தீ விபத்து நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் எரிந்து சேதமடைந்தது. இரண்டு தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் போராடி தீய அணைத்தனர். தீபிடித்த இடத்தை மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் பார்வையிட்டார். போலீசார் விசாரணையில் அருகேயுள்ள விஜய் உணவகத்தில் பணியாளர்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்து சிகரெட் குடித்து விட்டு அணைக்காமல் போட்டதால் தீபிடித்திருக்கும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tags :


















.jpg)
