டாக்டர் குளியலறையில் சடலமாக மீட்பு
2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இளம் டாக்டர் தம்பதியினர் வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சையது நிசாருதீன் (26), மொஹின் சைமா (22) ஆகியோர் இறந்து கிடந்தனர். பழுதான குளியலறை வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்களது வீடு ஹைதராபாத்தில் உள்ள காதர்பாக் பகுதியில் உள்ளது.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஏதோ பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, ஜன்னல் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, தம்பதியர் இறந்து கிடந்தது தெரியவந்தது,'என, மொஹின் சைமாவின் தந்தை கூறினார்.சைமா மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதாகவும், அவரது கணவர் சையத் நிசாருதீன் சூரியப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags :



















