சுரங்கப்பாதை  முன்பகுதி இடிந்து விழுந்து 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்மீட்கும்பணியில்..

by Admin / 12-11-2023 03:50:14pm
 சுரங்கப்பாதை  முன்பகுதி இடிந்து விழுந்து  40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்மீட்கும்பணியில்..

  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூறில்.,தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்திருந்த நிலையில் இன்று அதிகாலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளாக சுரங்கப்பாதை  முன்பகுதி இடிந்து விழுந்து அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 36 லிருந்து 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர் .இடிபாடுகளுக்கு இடையில் சிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் மாநில- மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து  மேற்கொண்டு வருகின்றனர். சுரங்க இடிபாடுக்குள் சிக்கி உள்ளவர்களுக்கு ஆக்சிசன் பைப் மூலமாக சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படாத வழியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு உணவுப் பொருள்களும் அனுப்பப்பட்டு வருவதாகவும் விரைவில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் . இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உள்ளவர்களை  மீட்கும்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.இந்த சுரங்கப்பாதையானது சார் தான் அனைத்து வானிலை சாலை திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. இதன் கட்டுமானம் உத்தர காசியில் இருந்து எமனோத்திரிக்கு இடையிலான 26 கிலோமீட்டர் தூரத்தை குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரு கிறது...

 சுரங்கப்பாதை  முன்பகுதி இடிந்து விழுந்து  40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்மீட்கும்பணியில்..
 
Tags :

Share via