அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் தலைமையில் சென்னை அண்ணா சிலை அருகில் தொடங்கி அண்ணா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. அங்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Tags :