அதிக கட்டணம் - 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார் எழுந்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி, சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த சோதனையில், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சோதனையில் முடிவில், 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Tags :