வாட்ஸ் ஆப்பில் மொபைல் நம்பர் சேவ் பண்ணாமலேயே மெசேஜ் அனுப்ப...

by Editor / 27-07-2021 08:32:39pm
வாட்ஸ் ஆப்பில் மொபைல் நம்பர் சேவ் பண்ணாமலேயே மெசேஜ் அனுப்ப...

 

தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, வீடியோ கால், லொகேஷன் ஷேரிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. வாட்ஸ் ஆப்பில் சிறப்பு அம்சங்கள் பல இருப்பது போலவே இதில் பிரச்சினைகளும் இருக்கின்றன.


அறிமுகம் இல்லாத நபர்களின் மொபைல் நம்பர்களுக்கு ஒரு முறை மட்டும் எஸ்.எம்.எஸ் அனுப்ப, நாம் அவர்களது நம்பரை சேவ் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு சேவ் செய்த பின்னர் தேவை முடிந்த பிறகு அந்த நம்பரை டெலீட் செய்துவிட வேண்டும். அவ்வாறு டெலீட் செய்யாமல் மறந்துவிட்டுவிட்டால், உங்களது வாட்ஸ் ஆப் புரோஃபைல் போட்டோ, ஸ்டேடஸ் போன்ற விவரங்களை அவர்கள் பார்க்கக்கூடும். எஸ்.எம்.எஸ். அனுப்பி தொந்தரவு செய்யவும் வாய்ப்பு உள்ளது. 


இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உங்களது வாட்ஸ் ஆப்பில் மொபைல் நம்பரை சேவ் செய்யாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி உள்ளது. அதற்கு நீங்கள் நேரடியாக மொபைல் போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாமல் மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் வெப் பிரவுசர் மூலமாக அவர்களது வாட்ஸ் ஆப் நம்பரில் சேட் செய்யலாம். அதற்கு நீங்கள் வெப் பிரவுசரை ஓப்பன் செய்து அதில் http://wa.me/PhoneNumber என டைப் செய்ய வேண்டும். 


இங்கே PhoneNumber என்பது நீங்கள் அனுப்ப வேண்டிய மொபைல் நம்பராகும். உதாரணமாக, நீங்கள் +919876543210 என்ற நம்பருக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் செய்ய வேண்டுமென்றால் http://wa.me/919876543210 என்ற முகவரியை டைப் செய்து உள்நுழைய வேண்டும். இவ்வாறு உள்நுழைந்தால் நீங்கள் சேட் செய்யவேண்டிய நம்பரில் நேரடியாக சேட் செய்யலாம். வாட்ஸ் ஆப்பில் செல்லத் தேவையில்லை. இவ்வாறு சேட் செய்வதன் மூலம் அவர்களது நம்பரை சேவ் செய்யமலேயே நீங்கள் பேச முடியும். பிரச்சினைகளும் வராது.

 

Tags :

Share via