பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வர்

by Editor / 27-07-2021 08:27:12pm
பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வர்



கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வராக இருந்த எடியூரப்பா தமது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற பாஜக ம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.


இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராக பசுவராஜ் பொம்மை  அறியப்படுகிறார். இவரது தந்தை  எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளார்.  மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசு பயன்படுத்தி வந்த 356ஆவது பிரிவுக்கு கடிவாளம் போட்டது பசுவராஜ் பொம்மையின் தந்தை  ‘எஸ்.ஆர் பொம்மை தொடுத்த வழக்காகும்.  மாநில அரசின் நிலைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும் போது எஸ்.ஆர்.பொம்மையின் வழக்கு நினைவுகூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via