சமூக பரவலாக மாறிய ஓமிக்ரான் INSACOG அமைப்பு தகவல்

by Editor / 23-01-2022 05:58:52pm
சமூக பரவலாக மாறிய ஓமிக்ரான்  INSACOG அமைப்பு தகவல்

ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசின் INSACOG அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.ஓமிக்ரானின் புதிய BA.2 வேரியண்டும் இந்தியாவில் கணிசமாக உள்ளது; இந்த வகையை டெஸ்ட்டிங்கில் கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளது.

வரும் காலத்தில் இந்தியாவில் சமூக பரவல் காரணமாக ஓமிக்ரான் பரவுமே தவிர வெளிநாட்டுப் பயணிகளால் பரவாது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிய வரும் நிலையில், இது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணிக்க INSACOG புதிய செயல்முறையை வடிவமைத்துள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, தடுப்பு ஊசிகளை முறையாக எடுத்துக் கொள்வது உள்ளிட்டவைகள்  மட்டுமே உருமாறும் கொரோனா வகைகளுக்கு எதிராக நம்மைக் காக்கும்.

 

Tags : Omigron-Central Government, which has become socially pervasive.

Share via