ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

by Staff / 06-12-2023 03:58:15pm
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹி என்ற அச்சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் போராடி சிறுமியை நேற்று அதிகாலை மீட்டனர். இந்நிலையில் போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo