தெருநாய்கள் கடித்துக்குதறியதில் 5 வயது சிறுமி பலி

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேடியா காவல்நிலையத்தில் பக்வா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சோனியா என்பவரை தெருநாய்கள் கடித்துள்ளது. சுமார் ஆறு நாய்கள் சிறுமியைத் தாக்கின. வீட்டுப் பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமியை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கியுள்ளன.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாக நாய்களை விரட்டியடித்து, சிறுமியை மீட்டனர், ஆனால் அதற்குள் குழந்தை பலத்த காயமடைந்தது. சிறுமி முதலில் உள்ளூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் பெடியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் ஏற்பட்ட காயங்களால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதே சிறுமியின் மரணத்திற்கு காரணம்.
Tags :