சித்த மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

by Staff / 26-01-2024 01:08:53pm
சித்த மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'பல்லாயிரம் ஆண்டு பழமையும், சிறப்புகளும் கொண்ட சித்த மருத்துவம் குறித்து இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் விழிப்புணர்வும், புரிதலும் இல்லை. இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைநகரங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்களையும், சித்த மருத்துவத்தின் தன்மையை மக்கள் அனுபவித்து புரிந்து கொள்ள மருத்துவ முகாம்களையும் நடத்த மத்திய அரசின் ஆயுஷ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via