அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ..வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ,தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று இரண்டு முறை ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையிலும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கவில்லை. இந்நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மானுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவருக்கு ஜாமீன் தர மறுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்
Tags :