அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்.

by Editor / 25-09-2022 03:22:03pm
 அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  சவால்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவில், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது:

திமுக ஆட்சிக்கு வந்தபோது அதிமுக கொண்டுவந்த விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டியிருந்தது. இந்த 2 திட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தவறு நடந்துள்ளது. என குற்றம் சாட்டினார் இந்த நிலையில் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  கூட்டுறவு துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்ததை நிரூபித்தால் நான் அரசியல் விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை எனில் அவர் விலக தயாரா?”என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  சவால்.
 

Tags :

Share via
Logo