அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டவருமான கருப்பசாமி பாண்டியன் உடல் நல குறைவால் காலமானார்.

by Editor / 26-03-2025 10:39:30am
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டவருமான கருப்பசாமி பாண்டியன் உடல் நல குறைவால் காலமானார்.


நெல்லை மாவட்டம் பர்கிட் மாநகரம் அடுத்த திருத்து பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் இவருக்கு வயது 78 இவருக்கு ஒரு மனைவியும் 6 குழந்தைகளும் உள்ளனர் இவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த நிலையில் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் ஆலங்குளம் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.வாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கருப்பசாமி பாண்டியன் அறிவிக்கப்பட்டார் பல்வேறு காரணங்களுக்காக 2000 ஆம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் திமுகவிலும் முக்கிய நிர்வாகியாக வளம் தந்த அவர் 2006 ஆம் ஆண்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளர் ஆகவும் வளம் வந்தார் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கி தொடங்கியது போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் 2020 ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத சூழலில் பல்வேறு முறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் உடல்நல குறைவால் அவர் காலமானார் (வயது 78).நெல்லை மாவட்டத்தில் திமுக அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாடுகளை முன்னின்று கருப்பசாமி பாண்டியன் நடத்தினர். நெல்லை நெப்போலியன் என கட்சியினரால் அழைக்கப்படும் கருப்பசாமி பாண்டியன் திமுக அதிமுகவின் முக்கிய அரசியல் புள்ளியாகவும் வலம் வந்தார் தற்போது அவரது மறைவு நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Tags : அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக

Share via