தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் .

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி நிருவாகத்துறையின் மூலம் தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளுக்கு உதவிக்கு வரும் நபர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூ.1.25 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்பிட கட்டிடத்தினையும், சுரண்டை நகராட்சியில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தினையும், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் மூலம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருராட்சி அலுவலக கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்கள்.
நகராட்சி நிருவாகத்துறையின் மூலம் சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், செங்கோட்டை நகராட்சி சுப்பிரமணியபுரம் உரக்கிடங்கில் ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், பண்பொழி பேரூராட்சியில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கும், இலஞ்சி முதல்நிலை பேரூராட்சியில் மூலதன நிதி மான்யம் திட்டம் 2024- 2025 - இன் கீழ் ரூ. 3.72 கோடி மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரத்தினை மேம்படுத்துதல் திட்டத்திற்கும், ஆழ்வார் குறிச்சி பேரூராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பிட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் பல்வேறு திட்டங்களைத் திறந்து வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
Tags : தென்காசி மாவட்டத்தில்