புதுவையில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரெங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்
புதுவையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரெங்கசாமி ஆகியோர் இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.75 வது சுதந்திர தினவிழா புதுவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்நிழ்ச்சியில் கவர்னர் மாளிகை பணியாளர்கள், முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே முதலமைச்சர் ரெங்கசாமிதேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதன் பிறகு அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் , உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் , அமைச்சர் தேனி ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலாளர் அஸ்வினிக்குமார் , டிஜிபி., ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா,எம்.எல்.ஏக்கள் ஜான் குமார் , ரிச்சர்டு விவிலியன் (பாஜக), வைத்தியநாதன் (காங்), கென்னடி, சம்பத், செந்தில்குமார்( திமுக), கலெக்டர், அரசு அதிகாரிகள் , சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அதேபோல சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் ரெங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மாகேயில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.லட்சுமி நாராயணன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். எம்.எல்.ஏ., பரமத் குமார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் அமைச்சர் சந்திரப்பிரியங்கா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். எம்.எல்.ஏக்கள் நாசீம் , திருமுருகன், நாகேந்திரன் கலந்து கொண்டனர்.ஏனாமில் அமைச்சர் சாய்சரவணக் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். எம்.எல்.ஏ., சீனிவாச அசோக் , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கொரோனா காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
Tags :