பள்ளிகளில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் தேசிய திறனாய்வு மாதிரி தேர்வு
புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுயம்புலிங்கம் மேல்நிலைப் பள்ளி, காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் தேசிய திறனாய்வு மாதிரி தேர்வு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி சார்பில் நடைப்பெற்றது. இதில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினார்கள். காருண்யா குணவதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் திரு. மாரியப்பன் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கற்பகராஜா, ராமர், சேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வானது மத்திய அரசு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதம் 1000 ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு 48000 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இது பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த மாதிரி தேர்வு நடைப்பெற்று வருகிறது. இதில் சுமார் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Tags : தேசிய திறனாய்வு மாதிரி தேர்வு