10 வயது சிறுமி பலாத்காரம்: காதணியை ரூ.6,500க்கு விற்ற குற்றவாளி

by Staff / 27-05-2024 01:47:22pm
10 வயது சிறுமி பலாத்காரம்: காதணியை ரூ.6,500க்கு விற்ற குற்றவாளி

கேரளாவின் வட மாவட்டமான காசர்கோட்டில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முதன்மை குற்றவாளியான பி.ஏ.சலீமின் சகோதரியும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்து அவரிடம் இருந்து கழற்றிய தங்கக் காதணியை ரூ.6,500க்கு விற்க அவர் உதவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குற்றத்தை செய்துவிட்டு சலீம் நேரடியாக கூத்துபரம்பிற்கு சென்று, தனது சகோதரியுடன் நகைக்கடைக்கு நகையை விற்பனை செய்துள்ளார். தங்கத்தை விற்றுவிட்டு, பணத்துடன் நேரடியாக மைசூருக்குச் சென்று பெங்களூரு, மும்பை மற்றும் ஆந்திராவுக்குச் சென்று சுற்றித்திரிந்த நிலையில், சமீபத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 

 

Tags :

Share via

More stories