ரயில் முன் பாயந்து பொறியாளர் தற்கொலை

by Staff / 10-09-2023 04:05:55pm
ரயில் முன் பாயந்து பொறியாளர் தற்கொலை

பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியில் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், பொள்ளாச்சி சேதுபதி நகரை சேர்ந்த என்ஜினீயர் ரஞ்சித்(வயது 29) என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via