நகர் புற உள்ளாட்சித்தேர்தல் மொத்த வாக்குப்பதிவு 60.70விழுக்காடு
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில், 21 மாநகராட்சி,138 நகராட்சி,489 பேரூராட்சி க்கான
வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.1,373 மாநகராட்சி,3,842நகராட்சி,7,605 பேரூராட்சி வார்டுகளுக்கும்
தேர்தல் நடைபெற்றது.2 கோடியே 83லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி கொண்டோராவர்.இவர்களில்
வாக்குசெலுத்தியவர்களின் விவரங்களில் 6.00 மணிவரை தமிழகமெங்கும் வாக்களித்தோர் 60.70 விழுக்காட்டினர்.
தலைநகர் ,சென்னையில் ஆரம்பம் முதலே மந்த கதியிலே வாக்குப்பதிவு நடைபெற்றது,ஆறு மணி நிலவரப்படி
43.59 விழுக்காடு வாக்குகளே பதிவாகிவுள்ளது.விடுமுறை அளிக்கப்பட்டும் பெரும்பான்மையினர் ஆர்வத்துடன்
வாக்களிக்க வரவில்லை.
Tags :


















.jpg)
