எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது - அமைச்சர் மனோ தங்கராஜ்
தொட்டிலை ஆட்டுவதும், பிள்ளையை கிள்ளுவதும் பாஜக, அதிமுகவினர் தான் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஆளுநர் சென்னாரெட்டி மீது அதிமுகவினரே முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஞாபகப்படுத்துகிறேன். இவர்கள் தான் பெட்ரோல் குண்டு வீச்சின் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருக்கும். எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது' என்றார்.
Tags :