ரயில் விபத்து.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்து இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 900 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ராணுவம், உள்ளூர் போலீசார், தன்னார்வலர்கள், 7 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் 5 ஒடிசா பேரிடர் மீட்பு குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags :