பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று ரத்து

by Staff / 03-06-2023 11:20:28am
பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று ரத்து

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் உள்பட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அனைத்து மாநிலங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோர விபத்து காரணமாக, அந்தந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பலி எண்ணிக்கை 278ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

 

Tags :

Share via