ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் ஆலோசனை

by Staff / 03-06-2023 11:24:16am
ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ரயில் விபத்து தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மீட்புப் பணிகள், நிவாரணம், சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துவது, அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா ரயில் விபத்தை அடுத்து. இன்று நடைபெற இருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo