மிகுந்த மனவேதனை அடைந்தேன் - தமிழிசை இரங்கல்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு இரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். ரயில்வே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் மாஹேவில் நான் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
Tags :