சசிகலா காலில் விழுந்தது ஏன்? - இபிஎஸ்

by Editor / 29-03-2024 11:34:20am
சசிகலா காலில் விழுந்தது ஏன்? - இபிஎஸ்

சசிகலா காலில் விழுந்தது ஏன்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக பதிலளித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக, நாதக, பாஜக என அனைத்து கட்சிகளும் கூட்டணிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான இபிஎஸ் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சசிகலா காலில் விழுந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இபிஎஸ், 'பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தவறா? பெரியவர் என்ற முறையில் அவரிடம் ஆசி வாங்கினேன். நான் என்ன 3வது மனுஷன் காலிலா விழுந்தேன். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது நான் எடுத்த முடிவு அல்ல, 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு' என்றார்.

 

Tags : மௌனம் கலைத்த இபிஎஸ்

Share via

More stories

Logo