பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முா்மூ மத்திய அரசின் திட்டங்கள் குறித்து உரைநிகழ்த்தினாா்.

by Admin / 28-01-2026 01:10:25pm
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முா்மூ மத்திய அரசின் திட்டங்கள் குறித்து உரைநிகழ்த்தினாா்.

இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்துடன் முதல் நாளான இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மூ இரு அவைகளில் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப் பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசு உண்மையான சமூக நிதிக்கு உறுதி கொண்டு உள்ளது என்றும் குறிப்பிடதோடு நாட்டில் சுமார் 95 கோடி மக்களுக்கு தற்போது சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பலன்கள் சென்றடைவதாகவும் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் கிராமங்களில் 125 நாட்கள் வேலை உறுதி அளிக்கப்படும் என்றும் கடந்த சில ஆண்டுகளில் நவீன உள் கட்டமைப்புக்காக மத்திய அரசு 25 லட்சம் கோடிக்கும் மேல் செலவீட்டு உள்ளது என்றும் தெரிவித்ததோடு இது இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாகவும் அவர் பாராட்டினார் . இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலியலை கொண்டுள்ளது என்றும் சுமார் 2 லட்சம் ஸ்டார்ட் அப் கள் நாட்டில்  இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளதை அவர் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

 

Tags :

Share via

More stories