இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இன்று காலை 11 .00 மணிக்கு உரையாற்றுகிறாா்.

by Admin / 28-01-2026 09:29:30am
இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இன்று காலை 11 .00 மணிக்கு உரையாற்றுகிறாா்.

இன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரெளபதிமுர்மூ இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இன்று காலை 11 .00 மணிக்கு உரையாற்றுவதன் மூலம் கூட்டம் முறைப்படி தொடங்குகிறது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார  அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026- 2027 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்கிறார். ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இரண்டாவது கூட்டத்தோடு மார்ச் 9 முதல் ஏப்ரல் ரெண்டு வரை நடைபெறும். மொத்தம் 65 நாட்கள் 30 அமர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் வேலைவாய்ப்பு ,எம் ஜி என் .ஆர் .இ .ஜி .

ஏ போன்ற மக்கள் நல திட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

Tags :

Share via
Logo