மகாராஷ்ட்ரா துணை முதல்வர் அஜித் பவாா் விமான விபத்தில் உயிரிழப்பு.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாா் இன்று காலையில் புனே மாவட்டம் பாராமதி அருகே நடந்த ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்று கொண்டிருந்த தனி விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் மோதி தீப்பிடித்து சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அஜித் போவார் உள்பட அந்த விமானத்தில் இருந்து ஐந்து பேரும் உயிரிழந்ததாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதில், ஒரு பாதுகாப்பு அதிகாரி, ஒரு உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகளும் அடங்குவர். பாராமதியில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.
Tags :
















.jpg)

