16 லட்சத்தில் நாய்க்கு வீடு

by Staff / 03-06-2023 05:22:15pm
16 லட்சத்தில் நாய்க்கு வீடு

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிரென்ட் ரிவேரா என்ற 25 வயது யூடியூபர் சார்லி என்ற செல்ல நாயை வளர்த்து வருகிறார். அதன் முதல் பிறந்தநாளுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸ் பரிசு கொடுக்க விரும்பிய அவர் 20 ஆயிரம் டாலர்கள் (ரூ.16.5 லட்சம்) செலவில் தன் செல்ல நாய்க்கு சொகுசு வீடு கட்டியுள்ளார். நாய்க்கென பிரத்யேக படுக்கை, நாற்காலிகள், சோஃபாக்கள் மற்றும் மினி ஃப்ரிட்ஜ் ஆகியவற்றை இந்த வீட்டில் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் வித்தியாசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo