அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், 'இண்டியா' கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 22ஆம் தேதி இரவு உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் கனிமொழி பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடிகுறித்து அவதூறாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இது தொடர்பாக பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சித்ராங்கதன், மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக நிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரியிடமும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் கடிதம் அளித்துள்ளனர்.
Tags :