போலி நகை வைத்து 1 கோடியே 25 லட்சம் மோசடி

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆத்தூர் கனரா வங்கி உதவி பொது மேலாளர் விஜயமுரளி என்பவர் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் ஆத்தூரில் உள்ள கனரா வங்கியில் சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நகை, சொத்து அடமான கடன்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஆத்தூர் கனரா வங்கியில் பணிபுரிய நகை மதிப்பீட்டாளர் அங்கணன் மற்றும் சங்கராஜ், கருப்பையா, பாண்டிகுமார் உள்ளிட்ட 6 பேர் போலி நகைகளை அடகு வைத்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ 76 கிராம் தங்க நகை அடகு வைத்து கடன் பெற்றிருந்தார். அவரது நகை கவரிங் நகையாக உள்ளது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சோனாஸ்ரீ நகையை வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :