24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

ஹிமாச்சலப் பிரதேசம்: சிர்மவுர் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் 24 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தனர். தொடர்ந்து காவல் துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அப்பள்ளியில் கணக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :