தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் கட்சியினர் பேனர் வைத்தனர். இந்த பேனர் காற்றில் பறந்து விழுந்ததில் சூளை பகுதியைச் சேர்ந்த மோகன் (72) என்ற முதியவர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் சதீஷ், ஜெகன், சந்தோஷ் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
Tags :