உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கறிஞர் பணியாற்ற தடை.

உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சொத்து தொடர்பான உரிமையியல் வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும், மாவட்ட முன்சீப் நீதிபதிக்கு எதிராகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததுடன், உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறாக பேசியதாக, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், இதுசம்பந்தமான விசாரணை முடியும் வரை, நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராக அவருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Tags : Lawyer banned from practicing for defaming High Court judge.