இன்றையராசி பலன்கள் -05-06-2023

by Admin / 05-06-2023 07:39:52am
இன்றையராசி பலன்கள் -05-06-2023

 

 

மேஷம்

ஜூன் 05, 2023

 

 

 

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

 

 

அஸ்வினி : அறிமுகம்  கிடைக்கும். 

 

பரணி : முன்னேற்றம் ஏற்படும்.

 

கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------

 

 

 

ரிஷபம்

ஜூன் 05, 2023

 

 

 

நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பணி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

 

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

 

ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.

 

மிருகசீரிஷம் : கையிருப்புகள் குறையும்.

---------------------------------------

 

 

 

மிதுனம்

ஜூன் 05, 2023

 

 

 

செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம்  ஏற்படும். சகோதர வழியில் ஆதரவு உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 

 

 

மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.

 

திருவாதிரை : நன்மை ஏற்படும். 

 

புனர்பூசம் : ஆதரவான நாள்.

---------------------------------------

 

 

 

கடகம்

ஜூன் 05, 2023

 

 

 

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். சிக்கல் விலகும் நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

 

புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

 

பூசம் : மகிழ்ச்சியான நாள்.

 

ஆயில்யம் : வாய்ப்புகள் சாதகமாகும். 

---------------------------------------

 

 

 

சிம்மம்

ஜூன் 05, 2023

 

 

 

உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதால் நெருக்கடிகள் குறையும். சிலருக்கு எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பெரிய மனிதர்களின் மறைமுக ஆதரவுகளின் மூலம் தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

 

 

மகம் : சோர்வு உண்டாகும்.

 

பூரம் : நெருக்கடிகள் குறையும்.

 

உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------

 

 

 

கன்னி

ஜூன் 05, 2023

 

 

 

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நவீன கருவிகளை கவனத்துடன் கையாளவும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம்  உண்டாகும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 

 

 

உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.

 

அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.

 

சித்திரை : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------

 

 

 

துலாம்

ஜூன் 05, 2023

 

 

 

புதுவிதமான திட்டங்களை மனதில் உருவாக்குவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல், வாங்கலில் திருப்தி ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

சித்திரை : திட்டங்கள் பிறக்கும்.

 

சுவாதி : லாபம் கிடைக்கும். 

 

விசாகம் : திருப்தியான நாள்.

---------------------------------------

 

 

 

விருச்சிகம்

ஜூன் 05, 2023

 

 

 

குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  வரவுக்கு மீறிய சில செலவுகள் ஏற்படும். அனுசரித்துச் செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம். பயணங்களின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் நம்பிக்கை அதிகரிக்கும். பரிசுகள் கிடைக்கும் நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 

 

 

விசாகம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

 

அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.

 

கேட்டை : விவேகம் வேண்டும்.

---------------------------------------

 

 

 

தனுசு

ஜூன் 05, 2023

 

 

 

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர் வழியில் அனுகூலம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

 

பூராடம் : தெளிவு பிறக்கும். 

 

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும். 

---------------------------------------

 

 

 

மகரம்

ஜூன் 05, 2023

 

 

 

வியாபார பணிகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரப்போக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

 

உத்திராடம் : தாமதங்கள் உண்டாகும். 

 

திருவோணம் : மாற்றம் ஏற்படும்.

 

அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------

 

 

 

கும்பம்

ஜூன் 05, 2023

 

 

 

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் குணம் அறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

 

அவிட்டம் : ஆதரவான நாள்.

 

சதயம் : மந்தநிலை விலகும். 

 

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------

 

 

 

மீனம்

ஜூன் 05, 2023

 

 

 

வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 

 

 

பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.

 

உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும். 

 

ரேவதி : நெருக்கடிகள் குறையும்.

 

Tags :

Share via