பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு 19,398 ரூபாய் அபராதம்

திருவாரூர் மாவட்டம் சீலத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமணவள்ளல் என்பவர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் தெற்கு கிழக்கு ராம்பார்ட் சாலையில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10,398 ரூபாய்க்கு பால் 4ஜி டேப்(Ball 4G Tab) ஒன்றை வாங்கியுள்ளார்.அதற்கு ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் தொகையாக கூடுதலாக 999 ரூபாய் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த டேப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்து பூர்விகா மொபைல்ஸ் தரப்பில் அவர் கேட்டபோது அவரை அலைக்கழித்ததுடன் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பழைய டேப்பை பெற்றுக்கொண்டு அதற்கு அவரிடமிருந்து வரதரிடம் பெற்ற தொகையான 11,398 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் மற்றும் மன கஷ்டத்திற்கு இழப்பீடாக 5000 ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 3000 ரூபாயும் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
Tags :