பிரபல இயக்குநர் தயாளன் கொரோனாவால் மரணம்

பிரபல தமிழ்திரைப்பட இயக்குநர் எஸ்.தயாளன் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் அவதிப்பட்ட தயாளன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை அவரது மகன் தெரிவித்துள்ளார்.
முரளி, தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோரை வைத்து கண்ணுக்கு கண்ணாக படத்தை இயக்கியவர் எஸ்.தயாளன். பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குனர் தயாளன், கண்ணுக்கு கண்ணாக பட இயக்குனர் ஆகி, அதன் பின்னரும் ரவிக்குமாரிடம் பணியாற்றி வந்தார்.நடிகர் விவேக், இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், பாடகர் கோமகன், தயாரிப்பாளர் பாபுராஜா, நடிகர் பாண்டு என்று தொடர்ந்து தமிழ்சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்து வருவது ரசிகர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது
Tags :