எப்படிப்பா இப்படி யோசிக்கிறாங்க..

by Editor / 12-02-2023 09:22:48pm
எப்படிப்பா இப்படி யோசிக்கிறாங்க..

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஆசைகள் அதிகமுண்டு கனவுகளும் உண்டு..அதில் கனவு இல்லங்கள் ஏராளம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். அந்தக் கனவு வீட்டைஎப்படியாவது கட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் பயணித்து வருகிறோம்.அதற்காக அனுமதியில்லாத வீட்டுமனைகளைக்கூட அவசர..அவசரமாக வாங்கி..அக்கம் பக்கத்தில் அதிகவட்டிக்கு  கடனை வாங்கி வீட்டை கட்டி விடுகிறோம்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் தென்காசி 1 வது வார்டு வீட்டு வசதிவாரிய குடியிருப்பின்  கடைசியில் உள்ளதுதான் வெல்கம் நகர் அந்தப்பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் 2022 ஆம் ஆண்டுவரையிலும் ஆக்கப்பூர்வமாக யோசித்து வித்தியாசமான கோணத்தில் ஒருவர் கட்டியுள்ள வீடு, அப்பகுதி மக்களின் கவனத்தைமட்டுமல்ல போவார் வருவோரின் கவனத்தையும்..மனசையும் பெரிதும் ஈர்த்துள்ளது.ஆமாங்க இது வீடா இல்லை வீடு மாதிரி வேறு ஏதோ ஒன்றை விஞ்ஞானப்பூர்வமாக கட்டியுள்ளாரா..என்றும் யோசிக்கத்தோன்றும் வண்ணம் அமையப்பெற்றுள்ள இல்லம்தான் இது.

ஆனால் இந்த வீட்டின் உரிமையாளரோ   தனது வீட்டை, அட்டைப் பெட்டிகள் போன்ற தோற்றத்தில் கட்டி உள்ளார். அதுவும் அவை சரிந்து கிடப்பது போன்று தலைகீழாக, அந்தரத்தில் தொங்கியபடி கட்டி உள்ளார். இதனை தென்காசி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் வித்தியாசமான வீட்டை பார்க்கும் இளைஞர்கள், அந்த வீட்டின் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.இந்த வித்தியாசமான வீடு இப்போது இணையத்தில் முக்கிய இடம்பெற்று வைரலாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo