நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

by Staff / 30-03-2024 11:56:00am
நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். ஓட்டேரி அரசு மின் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள டேனியல் பாலாஜியின் இல்லத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் கௌதம் மேனன், அமீர், வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் நள்ளிரவிலேயே மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.அவர் மறைந்த போதிலும் மற்றொருவரது உடலின் இரு கண்களாக வாழவும், ஒருவருக்கு பார்வை கொடுக்கவும் செய்து பெரும் துயரத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via