நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர்n பிரபலங்கள் வாழ்த்து

by Editor / 07-08-2021 07:24:22pm
நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர்n பிரபலங்கள் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது.

நமது நாட்டுக்கு முதல் தங்க பதக்கம் வாங்கி கொடுத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள தங்க மகன் நீரஜ் சோப்ரா வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்க நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது வருகின்றனர். அவற்றை கீழே காண்போம்.

பிரதமர் மோடி: டோக்கியோவில் இந்திய விளையாட்டு வரலாறு எழுதப்பட்டது! நீரஜ்சோப்ரா இன்று சாதித்தது என்றென்றும் நினைவில் இருக்கும். இளம் நீரஜ் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் விளையாடி, இணையற்ற திறமையைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: நீரஜ் சோப்ராவின் வரலாறு காணாத வெற்றி! உங்கள் ஈட்டி தங்க தடைகளை உடைத்து வரலாற்றை உருவாக்குகிறது. உங்கள் முதல் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் டிராக் அண்ட் ஃபீல்ட் பதக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தீர்கள். உங்கள் சாதனை எங்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்ச்சியடைகிறது! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Tags :

Share via

More stories

Logo