இங்கிலாந்து ராணி கமிலா, பெங்களூரு வருகை

by Staff / 25-10-2022 10:31:20am
இங்கிலாந்து ராணி கமிலா, பெங்களூரு வருகை

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் மனைவியும், அந்நாட்டின் ராணியுமான கமிலா(75) பெங்களூருவுக்கு வந்துள்ளார். அவருடன் தோழிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர். ராணி கமிலா, இதற்கு முன்பு 7 முறை பெங்களூருவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் ராணியாக பதவி ஏற்ற பின்பு முதல் பயணமாக பெங்களூருவுக்கு வந்துள்ளார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையம் உள்ளது. அந்த மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக ராணி கமிலா வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தன்னை அழகுப்படுத்தி கொள்வதற்காக ஒயிட்பீல்டில் உள்ள ஆயுர்வேத மையத்தில் ராணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் 10 நாட்கள் ஆயுர்வேத மையத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகிறார்

 

Tags :

Share via

More stories