மதுபோதையில் பெட்ரோல் பேங்க் ஊழியர்களை தாக்கிய இளைஞர்

by Editor / 24-06-2022 01:13:28pm
மதுபோதையில் பெட்ரோல் பேங்க் ஊழியர்களை தாக்கிய இளைஞர்

விழுப்புரம் அருகே பெட்ரோல் நிரப்ப மதுபோதையில் வந்த இளைஞர்கள் ஊழியர்கள் மீது நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. ஜானகி புறத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த 6 இளைஞர்கள் பெட்ரோல் நிரப்பி நீண்ட நேரமாக இருசக்கர வாகனத்தை நகர்த்தாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பங்க் மேலாளர் வாகனத்தை நகர்த்த கோரியதால் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்த அவரை தாக்கியதுடன் தடுக்க வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் பெட்ரோல் பங்கில் இருந்த இயந்திரங்களையும் தாக்கி  சேதப்படுத்தினர்.

 

Tags :

Share via

More stories