தமிழகத்தில் முக்கிய கோயில்களின் நடை சாத்தப்படுகிறது

by Staff / 25-10-2022 10:27:17am
தமிழகத்தில் முக்கிய கோயில்களின் நடை சாத்தப்படுகிறது

சூரிய கிரணகத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை, ஆரணியை அடுத்த, சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மதியம் 2 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும், 26ம் தேதி வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories