விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட பணி-தமிழ்நாடு அரசு புதிய அதிகாரியை நியமித்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான நில எடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் [ டி. ஆர். ஓ ]. நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து புதிதாக டெர்மினல் 5 அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக ஐந்தாவது முனியத்திற்கு பயணிகள் வந்து செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 32 இல் 5.32 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு புதிய மேம்பால இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது சென்னை விமான நிலையத்தின் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.7 கோடியாக இருக்கின்ற நிலையில் இந்த விரிவாக்க பணிகளின் மூலம் ஆண்டுக்கு அது 3.5 கோடியாக உயரும் என்று தெரிகிறது. பரந்தூர் புதிய விமான நிலைய அமைக்க திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட பணிகளுக்காக தற்பொழுது புதிய அதிகாரியை நியமித்துள்ளது.
Tags :


















